UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:24 PM

புதுச்சேரி: புதுச்சேரி ப்ரைனி ப்ளூம்ஸ் பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை வட்டம் 5 அளவில் நடந்த போட்டியில் 11 பரிசுகள் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டம் 5 வில்லியனுார் மண்டல அளவில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா போட்டிகளில் ப்ரைனி ப்ளூம்ஸ் கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு கலை மற்றும் இலக்கியப் பிரிவுகளில் பங்கேற்று மொத்தம் 11 பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.
அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. ப்ரைனி ப்ளூம்ஸ் கல்விக் குழுமத்தின் செயல் இயக்குனர் திவ்யா தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் நுார்ஜகான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டிார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் ஜீன் பீட்டர் நன்றி கூறினார்.
