/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீரோவை உடைத்து ரூ.2.30 லட்சம் நகை திருட்டு
/
பீரோவை உடைத்து ரூ.2.30 லட்சம் நகை திருட்டு
ADDED : அக் 20, 2025 12:19 AM
புதுச்சேரி: பீரோவை உடைத்து, ரூ .2.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏனாம், யு.கே., காலனியை சேர்ந்தவர் மல்லாடி சின்ன வீரபாபு,33; தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.
இவர், கடந்த 9ம் தேதி தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை பீரோவில் வைத்துவிட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு காக்கிநாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 17ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.
அதில் வைத்திருந்த2 மோதிரம் உள்ளிட்ட3 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. அதன் மதிப்பு ரூ.2.30 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஏனாம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.