/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம் 10 கிராமங்களில் மின் தடை
/
டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம் 10 கிராமங்களில் மின் தடை
டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம் 10 கிராமங்களில் மின் தடை
டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம் 10 கிராமங்களில் மின் தடை
ADDED : ஜன 18, 2024 04:10 AM

திருக்கனுார்: தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில், டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதமடைந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
திருக்கனுார் அடுத்த தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர் மூலம் திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று, நேற்று மாலை 4:00 மணியளவில் திடீரென தீப்பிடித்து இன்சுலேட்டர் வெடித்து சிதறியது.
தகவல் அறிந்த திருக்கனுார் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டிரான்ஸ்பார்மரில் 1,500 லிட்டர் ஆயில் இருந்ததால், தீயை அணைக்க முடியாமல் திணறினர்.
இதையடுத்து, கார்பன் டை ஆக்சைடுடன், தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், டிரான்ஸ்பார்மர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதனால், , திருக்கனுார், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
டிரான்ஸ்பார்மரை சரி செய்ய இரண்டு நாட்களுக்கு மேலாகும் என்பதால் தற்காலிகமாக திருபுவனை துணைமின் நிலையத்தின் மூலம் திருக்கனுார் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.