/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் சங்கத்தில் வணிக கருத்தரங்கு
/
தமிழ் சங்கத்தில் வணிக கருத்தரங்கு
ADDED : நவ 10, 2025 11:22 PM

புதுச்சேரி: நக்கீரர் தமிழ்ச் சங்கம் சார்பில் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு வணிக கருத்தரங்கம் புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். நக்கீரர் தமிழ்ச்சங்கத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார்.
துணை சபாநாயகர் ராஜவேலு வணிக கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில், புதுச்சேரி தமிழ்ச்சங்க செயலர் சீனுமோகன்தாஸ், பொதுச் செயலாளர் செழியன்குமாரசாமி, கைத்தடி பதிப்பகம் நிறுவனர் இன்பா, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.லண்டன் தமிழ்மொழி கலைக்கழகம் தலைவர் சிவா பாராட்டுரை வழங்கினார்.
துணைத்தலைவர் சுருளிவேல், துணை செயலாளர் புகழேந்தி, பெருமாள், சதீஷ் அசோகன், பாஸ்கரன், கீதா முத்தையன், உதவி பேராசிரியர் சண்முகசுந்தரி, மின்னல் பிரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார்.

