தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அக்கார்டு ஓட்டலில் கேக் கலவை நிகழ்வு

அக்கார்டு ஓட்டலில் கேக் கலவை நிகழ்வு

அக்கார்டு ஓட்டலில் கேக் கலவை நிகழ்வு


UPDATED : நவ 04, 2026 12:12 PM

ADDED : நவ 04, 2026 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:12 PM ADDED : நவ 04, 2026 12:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலில் 15வது ஆண்டாக பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பிற்கான கேக் கலவை நிகழ்வை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பாரம்பரியமான கேக் இல்லாமல் முழுமையடையாது. இந்த கேக்கை தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுகின்றன. இந்த கேக் தயாரிப்பின் முதல் படியான 'கேக் கலவை நிகழ்வு' உலகம் முழுதும் நன்மையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் சடங் காகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகேயுள்ள அக்கார்டு ஓட்டல், இந்த அழகான பாரம்பரியத்தை தொடர்ந்து 15வது ஆண்டாகக் கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புப் பணிகள் நேற்று அக்கார்டு ஓட்டலில் துவங்கியது. கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று கேக் உலர் பழக் கலவை நிகழ்வைத் துவக்கி வைத்தார்.

இதில் தலைமைச் செயலர் சரத் சவுகான், அக்கார்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் வைரகுமார், திட்ட மேலாளர் இளவரசு, பொது மேலாளர் ஆனந்த், ஓட்டலின் தலைமை செப் குமாரகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எவ்வளவு அதிகமானோர் இணைந்து கலக்கிறார்களோ, அவ்வளவு மகிழ்ச்சியும் கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பங்கேற்பாளர்கள் அனைவரும் கையுறைகளை அணிந்து கொண்டு ஒன்றிணைந்து இந்தக் கலவையை பிசைந்தனர்.

இந்த நிகழ்வில் 200 கிலோ உலர் பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் நறுமணப் பொருட்களுடன், 60 லிட்டர் ஒயின், ரம், விஸ்கி போன்ற பானங்கள் சேர்க்கப்பட்டு ஊறவைக்கப்பட்டன.

இந்தக் கலவையைக் கொண்டு மொத்தம் 1,200 கிலோ கேக் தயாரிக்கப்பட உள்ளது. இவை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை ஓட்டலில் காட்சிப்படுத்தப்பட்டு, பண்டிகைக் காலத்தில் தங்கும் விருந்தினர்களுக்கு விநி யோகிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us