தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க கோரிக்கை

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க கோரிக்கை

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க கோரிக்கை


ADDED : அக் 28, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கவர்னர், தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள மனு:

மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று (அக்.,27) முதல் நவ., 1ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய அளவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு வாரத்தை, புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் ஊழல் தடுப்பு உறுதிமொழியை ஏற்பதிலோ அல்லது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலோ கவனம் செலுத்தவில்லை.

சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை மற்றும் மின்துறைகளில் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் பரவலாக நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

எனவே, அனைத்துச் செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தவறாமல் ஊழல் தடுப்பு உறுதிமொழியை ஏற்க வேண்டும். பொதுமக்கள் நேரடியாக ஊழல் தொடர்பான புகார்களைத் தெரிவித்து தீர்வு காணும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அரசுத் துறைகளும் வெளிப்படையான பொது மக்கள் குறைகேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us