/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் சமூக வலைதள லிங்குகளை தொட வேண்டாம் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
/
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் சமூக வலைதள லிங்குகளை தொட வேண்டாம் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் சமூக வலைதள லிங்குகளை தொட வேண்டாம் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் சமூக வலைதள லிங்குகளை தொட வேண்டாம் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
ADDED : செப் 23, 2024 05:32 AM
புதுச்சேரி : தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்பு, சமூக வலைத்தள போலி விளம்பர லிங்குகளை தொட வேண்டாம் என, சைபர் கிரைம் போலீஸ்சார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த காலங்களில், வீட்டை உடைத்து திருட்டு, கொலை செய்து நகை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கும். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடக்க துவங்கி விட்டது.
வீட்டில் இருந்து யூடியூப் பார்த்து சம்பாதிக்கலாம் என துாண்டில் வீசி ஆசை வலையில் விழ வைக்கின்றனர்.
அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மர்ம நபர்கள் கூறுவதை நம்பி, பல லட்சம் பணத்தை இழக்கின்றனர்.
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ஆட்டோமெட்டிக் மூலம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என விளம்பரங்கள் லிங்குடன் உலா வருகிறது.
இதனை 'டச்' செய்து தகவல் பதிவிடும் நபர்களுக்கு போன் செய்து, தங்களின் வலையில் விழ வைக்கின்றனர்.
அதற்கு அடுத்த படியாக அடிக்கடி வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு விமானத்தில் சென்று வருபவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பார்சல் அனுப்புவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், நீங்கள் அனுப்பிய கூரியர் பார்சலில் போதை பொருள், சிம் கார்டு, போலி பாஸ்போர்ட்கள் உள்ளது.,
உங்கள் பெயரில் உள்ள ஆதார் கார்டு மூலம் பல வங்கி கணக்கு துவங்கி வெளிநாட்டிற்கு ஹவாலா பணம் கைமாற்றப்பட்டுள்ளது. உங்களை கைது செய்துள்ளோம். வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என, மிரட்டி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறித்து கொள்கின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வசிக்கும் தஞ்சாவூர் வாலிபருக்கு, சமூகவலைதளத்தில் உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா என்ற தகவல் வந்தது. அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசி, முன்பணம் ரூ. 5,000 கொடுத்து ஏமாந்தார். ஏமாற்றிய கடலுார் பெண்ணை போலீசார் கைது செய்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் அப்பெண்ணிடம் ஏமாந்ததுள்ளது தெரியவந்தது.
இதுபோன்ற மோசடியில் இருந்து தப்பிக்க, உங்களுக்கு தெரியாத நபரிடம் இருந்து வரும் மொபைல்போன் அழைப்புகளை எடுக்காமல் இருக்க வேண்டும்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்; வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் வீட்டில் இருந்து வேலை, குறைந்த விலைக்கு பொருட்கள் தருகிறோம், சிறிய முதலீடு அதிக லாபம், ேஷர் மார்க்கெட்டில் முதலீடு என விளம்பரங்களில் உள்ள லிங்குகளை தொட வேண்டாம்.
உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தல், மும்பை சைபர் கிரைம் போலீஸ் பேசுகிறோம், போதை பொருள் தடுப்பு பிரிவு பேசுகிறோம் என வரும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்களை எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர்.