மத்திய அரசு திட்டங்கள் குறித்து வில்லியனுாரில் இன்று முகாம்
மத்திய அரசு திட்டங்கள் குறித்து வில்லியனுாரில் இன்று முகாம்
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:06 PM
புதுச்சேரி: மாநில வங்கியாளர்கள் குழுமம் சார்பில், மத்திய அரசு திட்டங்கள் குறித்து வில்லியனுாரில் இன்று (21ம் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு, அக்டோபர் 21 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், வில்லியனூரில் உள்ள ஓட்டல் அக் ஷரதாவில் இன்று (21ம் தேதி) காலை 10:30 மணிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், பிரதமர் ஜனதன் யோஜனா, பிரதமர் ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா, பாதுகாப்பு பீமா யோஜனா அட்டல் பென்ஷன் யோஜனா போன்ற முக்கிய நிதி நலத் திட்டங்கள் குறித்து சேவைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், டிஜிட்டல் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு, மற்றும் வங்கி புகார் தீர்வு முறைகள் குறித்த தகவல்களும் வழங்கப்படுகின்றன.
