ADDED : செப் 22, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில், கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை அருகே உள்ள வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்தவர் அமலநாதன் மகன் ஜான்தாஸ், 35; கார் டிரைவர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்தது. அவரது மனைவி ரோமியோ மேரி, கணவரிடம் கோபித்து கொண்டு, பெங்களூருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.
அதில், மன விரக்தியில் இருந்த ஜான்தாஸ், நேற்று முன்தினம், வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.