ADDED : மே 02, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம் வடகட்டளை தெருவை சேர்ந்த ராஜா. கூலி தொழிலாளி. இவர் வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் காய்கறி செடிகள் மற்றும் பனங்கிழங்கு பயிர் செய்துள்ளார். இந்த இடத்தில் பன்றிகள் நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்து பன்றி வளர்பவரிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை இதனால் பாதிக்கப்பட்ட ராஜா நேற்று முன்தினம் திருப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் பன்றி உரிமையாளர் திருப்பட்டினம், திட்டச்சேரி சாலை நெல்லித்திடல் பகுதியை சேர்ந்த வேலு ,44 ; என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

