/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கதிர்காமம் வழுதாவூர் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்திருந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர் வைக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கோரிமேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கதிர்காமம், வழுதாவூர் சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தடையை மீறி பொது இடத்தில் வைத்ததாக வானுார், பெரம்பை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கந்தன், 30; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.