/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2024 07:30 AM
புதுச்சேரி: புதுச்சேரி, ஆண்டியார்பாளையம்பேட், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிலவன், 17; முள்ளோடையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகை என்பதால், தனது நண்பரான இனியவளவன் என்பவருடன் சேர்ந்த பைக்கில் நேற்று முன்தினம் இரவு தவளக்குப்பம் ஓட்டலில் சாப்பாடு வாங்க சென்றனர்.
தனியார் மதுபான கடை அருகே சாலையை கடக்க முயற்சித்தபோது, அங்கு நின்றிருந்த கடலுார், பெரிய காட்டுப்பாளயைம் பகுதியேச் சேர்ந்த அஜய், அவரது நண்பர்கள் விக்கி, சாரதி மற்றும் அடையாளம் தெரியாத நபர் முன் விரோதம் காரணமாக நிலவனை தாக்கினர்.
அஜய் அங்கிருந்து பீர் பாட்டிலால் நிலவன் தலையில் அடித்து, மிரட்டல் விடுத்து சென்றார். நிலவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தவளக்குப்பம் போலீசார் அஜய், சாரதி, விக்கி மற்றும் அடையாளம் தெரியாத நபர் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

