sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு: 48 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்

/

 கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு: 48 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்

 கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு: 48 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்

 கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு: 48 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்


ADDED : பிப் 02, 2026 03:37 AM

Google News

ADDED : பிப் 02, 2026 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 5 பேர் மீது வழக்குப்பதிந்து, 48 லிட்டர் மதுபானங்களை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வள்ளலார் தின்ததை முன்னிட்டு, புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபானம், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளை மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்தது. மதுபானக்கடைகள் மூடப்பட்டிருப்பதை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில், தாசில்தார்கள் ஷஜூ, விபீஷ், துணை தாசில்தார் ஜவஹர், வருவாய் ஆய்வாரள்கள் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைத்து வில்லியனுார், மண்ணாடிப்பட்டு, பாகூர், நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம் கொமயூன்கள், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது புதிய பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, சந்தை புதுக்குப்பம், சோரியாங்கும்ப்பம், மணமேடு, பாகூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்குப்பதிந்து, தப்பியோடியவர்கள் இடமிருந்து 48.78 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us