/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
/
டிராவல்ஸ் உரிமையாளரை தாக்கிய தம்பதி மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 04:40 AM
புதுச்சேரி : டிராவல்ஸ் உரிமையாளரை கல்லால் தாக்கிய தம்பதிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவடிக்குப்பம் இ.சி.ஆர்., சாலையை சேர்ந்தவர், பாக்கியராஜ், 44; இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவரது அலுவலகத்தில், வேலை செய்யும் கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாந்தாதேவியின் கணவர் சரவணன், நேற்று முன்தினம், டிரவல்ஸ் அலுவகத்திற்கு சென்று பாக்கியராஜிடம் தகராறு செய்தார். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, சரணவன், அவரது மனைவி ஆகியோர் பாக்கியராஜை கல்லால் தாக்கினர்.
காயமடைந்த, அவர், லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.