/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் பார்க்கிங் விடுவதில் தகராறு அரசு டாக்டர் மீது வழக்கு
/
கார் பார்க்கிங் விடுவதில் தகராறு அரசு டாக்டர் மீது வழக்கு
கார் பார்க்கிங் விடுவதில் தகராறு அரசு டாக்டர் மீது வழக்கு
கார் பார்க்கிங் விடுவதில் தகராறு அரசு டாக்டர் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 03:20 AM
புதுச்சேரி: கார் பார்க்கிங் விடுவதில் ஏற்பட்ட தகராறில் செக்யூரிட்டியை தாக்கிய டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார், மேலக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 75; தனியார் செக்யூரிட்டி. அண்ணா நகர் 2வது தெருவில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 14ம் தேதி மதியம் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த கார், சுந்தரமூர்த்தி பணி செய்யும் நிறுவனம் அருகே நிறுத்தப்பட்டது.
சுந்தரமூர்த்தி காரை வேறு இடத்தில் நிறுத்த கூறினார். இதனால் கார் உரிமையாளரான ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தாமரைச்செல்வனுக்கும், சுந்தரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சுந்தரமூர்த்தியை, தாமரைச்செல்வன் தாக்கினார். அப்போது, தவறி விழுந்ததில், காலில் காயமடைந்த சுந்தரமூர்த்தி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசில் 15ம் தேதி புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்ய தாமதம் செய்வதாக, த.வா.க., மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான நிர்வாகிகள் சீனியர் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதையடுத்து, இருதரப்பு புகாரின்பேரில், தாமரைச்செல்வன் மீதும் மற்றும் சுந்தரமூர்த்தி மற்றும் தனியார் இன்டர்நெட் நிறுவன ஊழியர்கள் சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.