ADDED : நவ 10, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோலம் போட்ட தகராறில் பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆலங்குப்பம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 42. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று (நவ.,9) ராஜேஸ்வரி தனது வீட்டின் வாசலில் கோலம் போட்டார். அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த கஜேந்திரன், ராஜலட்சுமி, தேவி ஆகியோர் தங்கள் வீட்டு பக்கம் தண்ணீர் வருவதாக கூறி ராஜேஸ்வரியை ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கஜேந்திரன் உட்பட மூவர் மீது டிநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
