தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து இடையூறு ‘டூவீலர்கள்’ அகற்றம்

போக்குவரத்து இடையூறு ‘டூவீலர்கள்’ அகற்றம்

போக்குவரத்து இடையூறு ‘டூவீலர்கள்’ அகற்றம்


UPDATED : நவ 10, 2026 07:27 PM

ADDED : நவ 10, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:27 PM ADDED : நவ 10, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகரப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர். முக்கிய இடங்களில் சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, கிழக்கு போக்குவரத்து போலீசார், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை சாலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோவில் செல்லும் சாலை, சட்டசபை முன்பு உள்ள சாலையில் இரு சக்கர வாகனங்களை தாறுமாகவும், நோ பார்க்கிங் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை நேற்று அதிரடியாக அகற்றினர்.

நோ பார்க்கிங் பகுதியில் இனி இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, வாகன ஓட்டிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us