ADDED : நவ 10, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பள்ளூரில் பகுதியில் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளம் மாநிலம், கண்ணுார் மாவட்டம், தலசேரி பகுதியை சேர்ந்தவர் அத்வைத்,27. இவர், மாகே, பந்தக்கல் பகுதியல் தங்கி இருந்தார். நேற்று (நவ.,9) வீட்டை விட்டு அவர் வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் அவரது அறையில் சென்று பார்த்தபோது, அத்வைத் சீலிங் பேனில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
