/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி வேன் உரிமையாளர் மீது வழக்கு
/
ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி வேன் உரிமையாளர் மீது வழக்கு
ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி வேன் உரிமையாளர் மீது வழக்கு
ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் மோசடி வேன் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூலை 25, 2025 02:37 AM
புதுச்சேரி: போலி இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ரூ.55 லட்சம் விபத்து காப்பீடு பெற முயன்றதாக வேன் உரிமையாளர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி டிராவல்ஸ் வேன் மோதிய விபத்தில் ஸ்கூட்டியில் சென்ற அபர்ணா, அவரது தாய் ஏகம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் ஏகம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து வழக்கில் ரூ.55 லட்சம் இழப்பீடு கோரி அபர்ணா குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் தாக்கல் செய்யபட்ட விபத்து ஏற்படுத்திய வேனின் இன்சூரன்ஸ் பாலிசியை, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த பாலிசி போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் புதுச்சேரியை சேர்ந்த வேன் உரிமையாளர் வேல்முருகன் மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.