sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாணவரை தாக்கிய 2 மீது வழக்கு பதிவு

/

 மாணவரை தாக்கிய 2 மீது வழக்கு பதிவு

 மாணவரை தாக்கிய 2 மீது வழக்கு பதிவு

 மாணவரை தாக்கிய 2 மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 14, 2026 06:58 PM

Google News

ADDED : ஏப் 14, 2026 06:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கல்லுாரி மாணவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தொண்டமாநத்தம், ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 21; தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 12ம் தேதி தனது நண்பர் ஹரியுடன் கொக்கு பார்க் அருகே டீ குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஹரியின் தம்பிக்கும், கதிர்காமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவருக்கும் இடையே ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தட்டாஞ்சாவடி கான்பெட் அருகே தகராறு நடந்து வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பிரபாகரன் மற்றும் ஹரி, தகராறில் ஈடுபட்ட சிறுவனிடம் சமாதானம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சிறுவனுக்கு ஆதரவாக கதிர்காமம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ், 22; கோரிமேடு, காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார், 23; ஆகியோர் அங்கு வந்து, கையில் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் பிரபாகரனையும், ஹரியின் தம்பியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக ஹரியின் தம்பி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபாகரன் புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us