தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு


ADDED : அக் 27, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது இடத்தில் ரகளை

காலாப்பட்டு போலீசார் நேற்று (அக்.,26) மாலை 3.15 மணியளவில் கணகசெட்டிக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த விஜயகுமார்,30; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

அதேபோல், அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல்பங்க் அருகே குடிபோதையில் ரகளை செய்த பெரியகாலாப்பட்டு தனபால்,46; என்பவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று மாலை 4.15 மணியளவில் உப்பளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எக்ஸ்போ மைதானத்தில் குடிபோதையில் அநாகரிமாக நடந்து கொண்ட வாணரப்பேட்டை ஜான்சன், ஏசுதாஸ் மகன் வின்சென்ட்,22; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு 7.50 மணியளவில் அய்யனார் கோவில் வீதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் பார் எதிரே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திண்டிவனம் வடமுண்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கோபிநாத்,20; என்பவர் மீது வழக்குப் தகது செய்தனர்.

மாகே நேற்று புழுதிதலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனவ சமுதாய நல கூடம் எதிரில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்களம் பகுதியை சேர்ந்த அஞ்சாமணி மகன் சந்துரு,26; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பள்ளூர் போலீசார் பரல் மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் எதிரில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம் கோபலபேட்டா பகுதியை சேர்ந்த ஷாஜூ,47; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us