தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


UPDATED : அக் 27, 2026 06:17 PM

ADDED : அக் 27, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 06:17 PM ADDED : அக் 27, 2026 06:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காச நோயாளிகளுக்கு வழங்க ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் குலோத்துங்கன் வழங்கினார்.

பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையான காச நோய் இல்லா பாரதத்தை உருவாக்கும் வகையில், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 250 ஊட்டச்சத்து பெட்டகத்தை, கலெக்டர் குலோத்துங்கன், புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ். லிமிடெட் நிறுவனத்தில் தொழிற்சாலை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில், டாக்டர் வெங்கடேஷிடம் வழங்கப்பட்டது.

அப்போது, பணியாளர் உறவுகள் தலைவர் பிரதீப், பயன்பாட்டு மேலாளர் அருள்மொழிதேவன், நிதி பிரிவு தலைவர் ராஜாகுமார், மனிதவள துறை தலைவர் அமிர்தவல்லி, மாநில ஆலோசகர் சூரியகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us