UPDATED : அக் 27, 2026 03:17 PM
ADDED : அக் 27, 2026 03:14 PM
அ நிறம் | அளவு
காரைக்கால் மாவட்ட திருப்பட்டினம் சப். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பட்டினம் பிப்டிக்.மைதானம் அருகில் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் பொதுமக்களை ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம், குரவன்குப்பம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் ஜீவா, 35; என தெரியவந்தது. அவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
