/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேசினோ டீ பாயிண்ட்: முதல்வர் திறந்து வைப்பு
/
கேசினோ டீ பாயிண்ட்: முதல்வர் திறந்து வைப்பு
ADDED : மார் 04, 2024 05:39 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு சிக்னல் அருகே புதிதாக கேசினோ டீ பாயிண்ட் திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னல் அருள்படையாட்சி தெருவில் புதிதாக கேசினோ டீ பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.கிளை உரிமையாளர் பிரமோத் வரவேற்றார். கேசினோ டீ பாயிண்ட் நிர்வாக இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி ரிப்பன்வெட்டி விளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்த முதல் விற்பனையை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி, வீரப்பலகாரங்களை வெளியிட்டு அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, விவிலியன் ரிச்சர்ட்ஸ் பா.ஜ., நகர மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முன்னாபாய்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவினையொட்டி சலுகையாக நேற்று டீ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று 4ம் தேதி காபி 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கேசினோ டீ பாயிண்ட் நிர்வாக இயக்குனர் சேகர், நம்முடைய கேசினோ டீ பாயிண்ட்டில் அமர்ந்து சுவையான டீ,காபி சாப்பிட விசாலமான இடவசதி உள்ளது.
சுவையான டீ,காபிகள் ஆர்டரின்பேரில் ஏற்பாடு செய்து தரப்படும். அதுமட்டு மின்றி பிஸ்கட், சமோசா,நொறுக்குதீனிகள் கிடைக்கும் என்றார்.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை கேசினோ டீ பாயிண்ட் மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

