/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் நிர்வாகத்தில் முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்
/
சென்டாக் நிர்வாகத்தில் முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்
சென்டாக் நிர்வாகத்தில் முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்
சென்டாக் நிர்வாகத்தில் முறைகேடு சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2025 03:07 AM
புதுச்சேரி : இரட்டை குடியுரிமை மூலம் சென்டாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி கவர்னர், முதல்வர் உட்படசுகாதார துறை அதிகாரிகளிடம், இரட்டை குடியுரிமை, போலி சான்றிதழ், ஆவணங்கள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சீட்களுக்கு இரு மாநிலங்களில் விண்ணப்பித்த மாணவர்களின்விபரங்களை உரிய ஆவணங்களோடு புகாராக அளித்தோம்.இதை விசாரித்த சென்டாக் நிர்வாகம், அதன் முடிவைபுதுச்சேரி சுகாதார துறை இயக்குநரகம் அலுவலகத்திற்கு கோப்பாக வழங்கினர். சுகாதார துறை இயக்குநரகத்தில் சரிபார்த்ததில், தமிழகத்தில் 8 பேரும், கேரளாவில் 6 பேரும் இருவேறு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தது நிரூபனமானது. இவர்களை,சுகாதார துறை இயக்குநரகம் மூலம்புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிடப்பட்டது.
நீக்கிய 14 மாணவர்கள் சென்டாக்கில் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், நீட் மதிப்பெண், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை தற்போது வரை புதுச்சேரி சென்டாக் நிர்வாகம், சுகாதார துறை சரிபார்க்காததுஅச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை குடியுரிமை மூலம் பல ஆண்டுகளாக சென்டாக் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.