/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் ஏப்., முதல் துவக்கம்
/
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் ஏப்., முதல் துவக்கம்
ADDED : ஜன 05, 2024 06:33 AM
புதுச்சேரி : அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் வரும் ஏப்ரல் முதல் துவங்குகிறது.
புதுச்சேரியில் கடந்த 2014-15ம் கல்வியாண்டு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2018-19ம் கல்வியாண்டில் 5ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்பும் மாநில பாடத்திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப் பட்டன.
மீதமுள்ள பத்தாம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளும் 2024-25ம் கல்வி யாண்டு முதல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாற உள்ளன. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கல்வி ஆண்டை இனி துவக்க உள்ளன.
இதனையொட்டி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொது டெர்மினல் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மார்ச் 20ம் முதல் 23ம் தேதி வரை தேர்வு முடிந்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை பள்ளிகள் இயக்கும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் 01-05-2024 முதல் 02-06-2024 வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஜூன் 3ம் தேதி முதல் மீண்டும் பள்ளி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.