தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பங்கள் வரவேற்பு

எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பங்கள் வரவேற்பு

எம்.டி., எம்.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : அக் 20, 2026 08:58 PM

ADDED : அக் 20, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 08:58 PM ADDED : அக் 20, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை சென்டாக் வெளியிட்டுள்ளது.

நீட்–பி.ஜி., தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து அரசு ஒதுக்கீடு, மேலாண்மை ஒதுக்கீடு மற்றும் தெலுங்கு சிறுபான்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 27ம் தேதி மாலை 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரியை சேர்ந்த அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு எஸ்.சி., – எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 1,500 மற்றும் பிற பிரிவினருக்கு ரூ. 3,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தெலுங்கு சிறுபான்மை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் சேர்த்து ரூ. 5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால், இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என, சென்டாக் எச்சரித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். மேலும் 0413-2655570 அல்லது 2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us