/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேனீ வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
/
தேனீ வளர்ப்பு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
ADDED : பிப் 20, 2025 06:28 AM

புதுச்சேரி: சுற்றுச்சூழல் துறை சார்பில் நடத்தப்பட்ட தேனீ வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகம் நிதியுதவியுடன், புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் திறன் மேம்பாட்டிற்கு, பசுமை திறன் மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு அறிவு திறனை ஊக்குவிக்கவும், சுய வேலை வாய்ப்பை வழங்குவதிற்கான முயற்சியாக, தொழில்நுட்ப அறிவு மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான பசுமை திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம், சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ், 'தேனீ வளர்ப்பு நிபுணர் மற்றும் காட்டு தேனீ வளர்ப்பு' என்ற தலைப்பில், சான்றிதழ் வகுப்பு கடந்த 8 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடத்தப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழா, லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது.
அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறை பொறியாளர் காளமேகம் வரவேற்றார். மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பயிற்சி பெற்ற 25 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாட்டு திட்ட அலுவலர் நித்யா நன்றி கூறினார்.

