/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு
/
பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூலை 31, 2025 10:41 PM
புதுச்சேரி; தனியார் பள்ளி ஆசிரியையிடம் முகவரி கேட்பது போல், செயினை பறித்து சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளம், ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெரால்டு. இவரது மனைவி அஞ்சலின் நிர்மலா மேரி, 58; உப்பளம் தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலை 4:00 மணியளவில் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
மூலக்குளம், டீச்சர்ஸ் காலனியில் உள்ள பாவேந்தர் நகர், 7 வது குறுக்கு தெருவில் வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அஞ்சலின் நிர்மலா மேரியை நிறுத்தி, ஒரு பேப்பரை கொடுத்து அதில் இருந்த முகவரி எங்கே இருக்கிறது என, கேட்டனர்.
அதற்கு, அஞ்சலின் நிர்மலா மேரி பதில் அளித்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினை, பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

