காமாட்சி அலங்காரத்தில் சண்டி மகாதேவி அருள்பாலிப்பு
காமாட்சி அலங்காரத்தில் சண்டி மகாதேவி அருள்பாலிப்பு
ADDED : அக் 18, 2026 10:30 PM

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் எட்டாவது நாள் நிகழ்ச்சியில் நேற்று காமாட்சி அலங்காரத்தில் சண்டி மகாதேவி அருள்பாலித்தார்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
எட்டாவது நாளான நேற்று காலையில் கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, பின் 108 திரவியங்களை கொண்டு யாகம் நடந்தது. பூர்ணாஹூதிக்கு முன்பாக பட்டு புடவை, தங்க திருமாங்கல்யம் ேஹாமத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டது.
சண்டி மகாதேவி காமாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலையில், புதுச்சேரி சரவணா அருள் நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தர்ம சம்ரக்ஷண சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
