தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதல்வர், கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து

முதல்வர், கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து

முதல்வர், கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து


UPDATED : அக் 18, 2026 10:30 PM

ADDED : அக் 18, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 10:30 PM ADDED : அக் 18, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு பண்டிகையும் நம்முடைய பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. கல்விக்கும் தொழிலுக்கும் நாம் தரும் முக்கியத்துவத்தை கொண்டாடும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா பிரதிபலிக்கிறது. தொழில் கருவிகளை வணங்கி, நாம் எடுக்கும் இந்த பாரம்பரிய விழா நம் அனைவரது வாழ்வில், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உணர்வையும் மேம்படுத்த வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், உழைப்பையும், அறிவையும் இரு கண்களாக கொண்டு ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவூட்டும் இந்த நாட்களில் அனைவரது இல்லங்களிலும், மகிழ்ச்சியையும், மனநிறைவுவையும், ஏற்படுத்தட்டும்.

சரஸ்வதியின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க உங்கள் அனைவருக்கும், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் என, கூறியுள்ளார்.

சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன், எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,நேரு, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us