/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில் வரும் 15ம் தேதி தேரோட்டம்
/
வீராம்பட்டினத்தில் வரும் 15ம் தேதி தேரோட்டம்
ADDED : ஆக 01, 2025 02:26 AM
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், வரும் 15ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
வீராம்பட்டினம் பிரசித்திபெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில், தேர்திருவிழா, வரும் 6ம் தேதி, காலை 6:00 மணிக்கு,கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் 7ம் தேதி, காலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள், கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 8ம் தேதி முதல், 14ம் தேதி வரை, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான, வரும் 15ம் தேதி, காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்டத்தை, பிரெஞ்சு காலத்தில் இருந்து மரபுபடி, கவர்னர் துவக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கின்றனர்.
ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழுவினர், நிர்வாக அதிகாரி சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.