ADDED : ஆக 19, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஆன்லைன் மூலம் முதியவரிடம் 3.87 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெத்துசெட்டிபேட் பகுதியை சேர்ந்தவர் பாலன், 62. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய அவர் 3.87 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்தார்.
பின், அதில் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர், மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பாலன் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
