தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்பேட்டை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அமைச்சர் ஆலோசனை

தொழில்பேட்டை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அமைச்சர் ஆலோசனை

தொழில்பேட்டை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அமைச்சர் ஆலோசனை


ADDED : ஆக 19, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழில்பேட்டைகளில் தடையற்ற மின்சாரம் வழங்க அமைச்சர் மல்லாடிகிருஷ்ணா ராவ் உத்தரவிட்டார்.

தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, தொழிற்சாலைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

அமைச்சர்  மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிப்டிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு தொழிற்பேட்டைகள், திருபுவனை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் உள்கட்டமைப்புகளை சீரமைத்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார். இக்கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் தொழில்துறை அரசுச் செயலர் விக்ராந்த் ராஜா, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சங்கத் தலைவர் வேலாயுதம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவர் அருள்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us