UPDATED : அக் 28, 2026 11:59 PM
ADDED : அக் 28, 2026 09:19 PM

கீழே சேர்க்கவும்
புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் துார்வாரும் பணியினை தலைமை பொறியாளர் வீரசெல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வெளியேற வழியின்றி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், நெல்லிதோப்பு சக்தி நகர், அவ்வை நகர், உப்பனாறு வாய்க்கால், கோரிமேடு, சாரம் பகுதிகளில் உள்ள வாய்க்கால் பொதுப்பணித்துறை மூலம் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியினை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் பக்தவச்சலம் மற்றும் உதவிப் பொறியாளர் லுாயிஸ் பிரகாசம் நிக்கேட் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வாய்க்கால் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தலைமை பொறியாளர் உத்தரவிட்டார்.
