UPDATED : அக் 28, 2026 11:58 PM
ADDED : அக் 28, 2026 09:23 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் தலை கடவுச்சீட்டு வெளியிடும் நிகழ்ச்சி இன்று (அக்.,28) நடந்தது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை சேகரிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை கடவுச்சீட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி தலைமை அஞ்சலகம் மற்றும் அரபிந்தோ ஆசிரமம் அஞ்சலகத்தில், புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவியா வெளியிட்டார்.
துணை கண்காணிப்பாளர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பகுதியில் சிறப்பு அஞ்சல் தலை சேகரிப்பாளர் திரளாக கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் தலை கடவுசீட்டை பெற்று சென்றனர்.
புதுச்சேரி தலைமை அஞ்சல் அதிகாரி கருணாகரன், உதவி அஞ்சல் அதிகாரி கோவிந்தராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
