/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.60 கோடியில் துணை மின் நிலையம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார் முதல்வர்

ADDED : பிப் 21, 2026 05:13 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், 60.36 கோடி ரூபாய் மதிப்பில், புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் சுற்று வட்டார பகுதியில் மின் பற்றாக்குறையால், அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, புதுச்சேரி மின் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை சிவன் கோவில் அருகில், 60.36 கோடி ரூபாய் மதிப்பில், 110/22 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகளுடன் துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, முதல்வர் ரங்கசாமி, பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், அரசு செயலர் முத்தம்மா, தவளக்குப்பம் மின்துறை இளநிலைப்பொறியாளர் திருமுருகன், மின் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.