sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதல் வேட்பாளரை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி: ஏனாம் தொகுதியில் மல்லாடிகிருஷ்ணராவ் போட்டி 

/

 முதல் வேட்பாளரை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி: ஏனாம் தொகுதியில் மல்லாடிகிருஷ்ணராவ் போட்டி 

 முதல் வேட்பாளரை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி: ஏனாம் தொகுதியில் மல்லாடிகிருஷ்ணராவ் போட்டி 

 முதல் வேட்பாளரை அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி: ஏனாம் தொகுதியில் மல்லாடிகிருஷ்ணராவ் போட்டி 


ADDED : மார் 16, 2026 04:43 AM

Google News

ADDED : மார் 16, 2026 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக மல்லாடிகிருஷ்ணராவ் நிற்பார் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

ஏனாம் பிராந்தியத்திற்கு நேற்று சென்ற முதல்வர் ரங்கசாமி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது என்.ஆர்.காங்., தொண்டர்கள், முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் ஆதரவாளர்கள் முதல்வர் ரங்கசாமியிடம், கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக நீங்கள் போட்டியிட்டீர்கள்.

உங்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிப் பெற் சுயேச்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் பா.ஜ.,விற்கு ஆதரவு கொடுத்து கட்சி பணியாற்றி வருகிறார்.வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ..விற்கு தான் தான் சீட் என்று அவரும் சொல்லி வருகின்றார். உண்மையில் இந்த தொகுதியில் யாருக்கு சீட்டு.. என்.ஆர்.காங்., நிற்குமா., .பா.ஜ., நிற்குமா என்று தெளிவுப்படுத்த வேண்டும் என, குமுறலுடன் முறையிட்டனர்.

இதனை கேட்டு கொண்ட முதல்வர் ரங்கசாமி, மேடையிலேயே அதிரடியாக என்.ஆர்.காங்.,கட்சியின் முதல் வேட்பாளரை அறிவித்தார்.வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., ஏனாம் தொகுதியில் போட்டியிடும். இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளராக மல்லாடிகிருஷ்ணராவ் நிற்பார் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்ததும், அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டலுடன் வரவேற்றனர்.

மல்லாடிகிருஷ்ணராவ்1996ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 5 முறை ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகதேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் மீன்வளம் போன்ற பல்வேறு அமைச்சர்பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த முறை முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் வகையில் தொகுதியை விட்டு கொடுத்தார். அவர், அப்போது புதுச்சேரி அரசின்டில்லி பிரநிதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனாம் தொகுதியில்பா.ஜ., ஆதரவு சுயேச்சைஎம்.எல்.ஏ.,கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்,மீண்டும் சீட்டினைகுறி வைத்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி அதிரடியாக ஏனாமில் என்.ஆர்.காங்., மீண்டும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us