/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் ஆணைய புதிய கட்டடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
/
நுகர்வோர் ஆணைய புதிய கட்டடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
நுகர்வோர் ஆணைய புதிய கட்டடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
நுகர்வோர் ஆணைய புதிய கட்டடம் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ADDED : பிப் 23, 2026 04:35 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் மாநில, மாவட்ட நுகர்வோர் ஆணையங்களுக்கான புதிய கட்டடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
மாநில நுகர்வோர் ஆணையத் தலைவர் சுந்தரவடிவேலு வரவேற்றார். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், சட்டச் செயலாளர் சந்திரன், குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி வாழ்த்தி பேசினர்.
விழாவில், மாவட்ட ஆணையத் தலைவர் முத்துவேல், மாநில ஆணைய உறுப்பினர் உமாசங்கரி, மாவட்ட ஆணைய உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
சிறப்பு என்ன முத்தியால்பேட்டையில் அமைந்திருக்கும் தற்போதைய கட்டடத்தில் ஒரே ஒரு நீதிமன்ற அரங்கம் மட்டுமே உள்ளது. எனவே மாநில - மாவட்ட என, இரண்டு ஆணையங்களும் ஒரே அரங்கத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
இது நுகர்வோர் ஆணையங்களின் செயல்பாட்டின் செயல்திறனைப் பாதித்தது. கட்டடம் மிகவும் சிறியதாக இருந்ததால், வக்கீல்கள், மற்றும் ஆணையத்தின் ஊழியர்களுக்கு இடம் போதுமானதாக இல்லை.
வாகனங்கள் நிறுத்தும் இடமும் சிறிதாகவே இருந்தது. சிரமங்களை கருத்தில் கொண்டு, லாஸ்பேட்டையில் பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் இருந்த பசுமை தீர்ப்பாய கட்டடத்தை ஒதுக்கியது. மேலும் கட்டடம் ரூ. 80 லட்சம் செலவில் புதுப்பித்தும் கொடுத்து, திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டடம் விசாலமானது. போதுமான வாகன நிறுத்துமிடத்துடன் மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையத்திற்குகென தனித்தனி நீதிமன்ற அரங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

