/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜான்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க காத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி
/
ஜான்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க காத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி
ஜான்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க காத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி
ஜான்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க காத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி
ADDED : நவ 09, 2025 05:46 AM
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில், அமைச்சராக இருந்த பா.ஜ.,வை சேர்ந்த சாய் சரவணன்குமார் கடந்த ஜூலை மாதம் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, அதே கட்சியை சேர்ந்த ஜான்குமார் அமைச்சராக்கப்பட்டார். பதவி ஏற்று 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல், முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் விழாவிற்காக, ஏனாமில் தேசியக்கொடி ஏற்றி வைப்பதற்காக அமைச்சர் ஜான்குமாரிடம் அரசு தரப்பில் தகவல் கூறி, அதற்கான அழைப்பிதழும் அமைச்சர் ஜான்குமார் பெயருடன் வெளியானது. இந்நிலையில், இந்த விழாவினை புறக்கணித்து அமைச்சர் ஜான்குமார் சிங்கப்பூர் சென்றுவிட்ட தகவல் கடைசி நேரத்தில் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
புதுச்சேரி வரலாற்றில் எந்த ஒரு அமைச்சரும் இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விழாவினை புறக்கணித்ததாக வரலாறு இல்லை. அமைச்சர் ஜான் குமாரின் செயலால் முதல்வர் ரங்கசாமி மட்டுமின்றி பாஜ.,வினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி அரசையம், முதல்வர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்து வரும் லாட்டரி அதிபரின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன், அமைச்சர் ஜான்குமார் நெருக்கமாக இருப்பது முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடு, சில தினங்களுக்கு முன் ஜான்குமாருக்கு இலாக ஒதுக்கீடு தொடர்பாக பேச சென்ற பா.ஜ.,வினரிடம், முதல்வர் ரங்கசாமி கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
கூட்டணி தலைவருக்கு மட்டுமின்றி அமைச்சர் ஜான்குமார் கட்சித் தலைமைக்கும் கட்டுப்படாமல், 45 அடி சாலையில் உள்ள தனது அரசு அலுவலகத்தில், வழக்கம்போல் அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவது பாஜ., தலைமைக்கும் பெரும் கடும் எரிச்சலை உண்டாக்கி உள்ளது.
இதுமட்டுமின்றி, ஜான் குமார், சார்லஸ் மார்ட்டின் போன்றவர்களின் செயல்பாடுகளால் என்.ஆர்.காங்., கூட்டணி முறிந்து விடுமோ என்ற அச்சம் பாஜ.,வினரிடம் தற்போது எழுந்து விட்டது. மேலும், கூட்டணியை விட்டு முதல்வர் ரங்கசாமி வெளியேறினால், அவருடன் கூட்டணி அமைக்க தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., வினர் கண் கொத்தி பாம்பு போல் தயார் நிலையில் உள்ள தகவல்களையும் பாஜ.,தலைமைக்கு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் தேர்தல் முடிந்த பின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வி ரைவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளார். அவரிடம் அமைச்சர் ஜான் குமாரின் செயல்பாடுகளை கூறி அவரின் அமைச்சர் பதவியை பறிக்க முதல்வர் ரங்கசாமி காத்திருப்பதாக என்.ஆர்.காங்., கட்சியினர் கூறி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறதோ?

