/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் முதல்வர் ரங்கசாமி 'பளீச்' பதில்
/
ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் முதல்வர் ரங்கசாமி 'பளீச்' பதில்
ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் முதல்வர் ரங்கசாமி 'பளீச்' பதில்
ஆதிதிராவிடர்களுக்கு முக்கியத்துவம் முதல்வர் ரங்கசாமி 'பளீச்' பதில்
ADDED : ஜூலை 16, 2025 01:36 AM
புதுச்சேரி : ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளித்தே இந்த அரசு இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.
காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த மாணவர் நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது;
நகரில் குப்பைகள் அகற்றப்படாமல், ஆங்காங்கே குவிந்து கிடப்பதாகவும், குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. கிரீன் வாரியார் நிறுவனம் சரியாக செயல்படவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று நகரப் பகுதிகளை சென்று பார்க்கட்டும். குறைகள் இருந்தால் கூறினால், நிவர்த்தி செய்வோம்.
புதிய அமைச்சரக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும். எங்கள் அரசில் ஆதிதிரவிடர் வகுப்பினர் புறக்கணிப்பதாக கூறுவது தவறு. ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து, இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதே இந்த அரசுதான் என்றார்.
தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது;
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது எல்லாம், ஆன்லைன் கோப்புகளாகிவிட்டது. அதனால், கவர்னர் எங்கிருந்தாலும் ஒப்புதல் கொடுத்துவிடுவார்.
லேப்டாப் விரைவில் வழங்கப்படும். வாங்க டெண்டர் விடப்பட்டு விட்டது. கடந்த காலங்களில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் லேப்டாப் வழங்கப்படும். சென்டாக் மாணவர்களுக்கு பணம் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.