/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தர்களின் ஆசியால் தான் தனிநபர் வருமானம் உயர்ந்தது முதல்வர் ரங்கசாமி பேச்சு

ADDED : ஜூலை 19, 2025 06:39 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சித்தர்களின் ஆசியால் தான் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த சித்தர்களின் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கத்தில் அவர், பேசியதாவது:
புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற ஆன்மிக பூமி. அன்போடு இருக்க வேண்டும். பசியை போக்க வேண்டும். நோய் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என, ஒவ்வொரு சித்தரும், ஒரு விதமான கோணத்தில் இருப்பர். புதுச்சேரி சிறிய மாநிலம், இங்கு தனிநபர் வருமானம் ரூ.3. 41 லட்சமாக உயர்ந்துள்ளது சித்தர்களின் ஆசியால் தான்.
அவர்களின் அருள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். அதனை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். நான் சிறியவனாக இருந்தபோது எப்போதாவது விபூதி பூசுவேன். அப்பா பைத்தியம் சுவாமிகளைச் சந்தித்தப் பிறகு விபூதி பூசாமல் வெளியே வருவதில்லை.
சித்தர்கள் எந்த நிலையில் இருக்கின்றனர், எப்படி வருகின்றனர், செல்கின்றனர் என்பது தெரியாது. ஆனால் அவர்களின் அருளாசி இருந்தால் வாழ்வில் முன்னேற்றத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கலாம்.
புதுச்சேரியில் இப்போதும் எத்தனையோ சித்தர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். சித்தர்கள் இருக்கின்ற பகுதி பெரிய வளர்ச்சி ஏற்படும். அதுபோல் புதுச்சேரியும் வளர்ந்து வருகிறது என்றார்.