/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : அக் 29, 2024 06:35 AM

புதுச்சேரி: தோட்டக்கலை விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தோட்டக்கலை கூடுதல் வேளாண் அலுவலகம் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ், புதிய தோட்டங்கள் அமைக்கவும், மலர் சாகுபடி, கலப்பின காய்கறிகள், பழப்பயிர்கள், வாசனை பயிர்கள், மூடாக்கு அமைத்தல் சாகுபடி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உற்பத்தி பிந்தைய மானியம் வழங்கப்படுகின்றது.
அதன்படி உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் தேனீஜெயக்குமார் முன்னிலையில் நேற்று சட்டசபை வளாகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி தோட்டக்கலை விவசாயிகளுக்கு உற்பத்தி மானியத் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து 103.17 ெஹக்டர் பரப்பளவில் தைப்பட்டம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த 439 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.15,48,061 பொது நிதியியல் நிர்வகிப்பு அமைப்பு மூலம் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக உற்பத்திய மானியமாக செலுத்தப்பட்டது.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்சரவணன்குமார், வேளாண் இயக்குனர் வசந்தகுமார், தோட்டக்கலை பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.