/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி உத்தரவு
/
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி உத்தரவு
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி உத்தரவு
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் முதல்வர் ரங்கசாமி உத்தரவு
ADDED : அக் 15, 2024 06:25 AM

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், வளர்ச்சி ஆணையர் ஆஷிஷ் மாதோவ்ராவ் மோரே, அரசு செயலர் கள் ராஜி, ஜவகர், ஜெயந்த் குமாரே, கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், சுகாதாரத்துறை இயக்குநர் (பொறுப்பு) செவ்வேள், உள்ளாட்சித்துறை இயக்குநர் சக்திவேல், சப் கலெக்டர் சவுந்தரி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பருவமழையை எதிர்கொள்ள துறை ரீதியாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையின்படி, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக மழைபொழிவு அதிகரிக்க கூடும் என்ற முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து நீர் நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகளை துரிதமாக துர்வார வேண்டும்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மீட்பு பணிகளுக்காக தேவைப்படும் உபகரணங்களை பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழை குறித்த வானிலை எச்சரிக்கைகளை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து அரசு துறைகளிலும், 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு தேவையான பம்பு உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.