/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை சபாநாயகர் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா
/
துணை சபாநாயகர் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா
துணை சபாநாயகர் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா
துணை சபாநாயகர் தலைமையில் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 06, 2025 08:49 AM

நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நெட்டப்பாக்கம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழாவையொட்டி, தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள கோவில்களிலும் சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதனாம் வழங்கப்பட்டது.
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் முதல்வர் ரங்கசாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் மெகா சைஸ் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் துணை சபாநாயகர் ஏற்பாட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில், துணை சபாநாயகர் 75 கிலோ எடையுள்ள பிரத்யோக கேக் தாயரிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொண்டாடினார்.
விழாவில் நெட்டப்பாக்கம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து துணை சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.