UPDATED : அக் 07, 2026 09:31 PM
ADDED : அக் 07, 2026 07:26 PM

வில்லியனுார்: வில்லியனுாரில் சத்துணவு மாத விழாவில் குழந்தைகளுக்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கி, பாராட்டினார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், வில்லியனுார் சிவசுப்ரமணியர் கோவில் வளாகத்தில் சத்துணவு மாத விழா நடந்தது.
விழாவில் நடந்த ஆரம்ப கால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று சத்துணவு பொருட்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து வில்லியனுார் பகுதியில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் இருந்து வருகை தந்த குழந்தைகளின் பேச்சு, மாறுவேடம் மற்றும் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை குழந்தைகள் திட்ட நல அலுவலர், அங்கன்வாடி டீச்சர்கள், உதவியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
