போதை பழக்கத்தில் இருந்து மீட்க புதிய திட்டம் துவக்கம்
போதை பழக்கத்தில் இருந்து மீட்க புதிய திட்டம் துவக்கம்
UPDATED : அக் 07, 2026 09:31 PM
ADDED : அக் 07, 2026 07:26 PM

புதுச்சேரி: குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டு ( பிராஜெக்ட் ரீக்ளைம்) என்ற புதிய திட்டத்தை, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைடு துவக்கியுள்ளது.
புதுச்சேரியில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் சார்ந்த பழக்கத்தைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், இளம் தலைமுறையை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டு, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான சமூக சேவை முயற்சியாகும்.
இதற்கான நிகழ்ச்சி, புதுச்சேரி, ஓட்டல் 'சன்வே'யில் நடந்தது. ரோட்டரி ஆளுநர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார். டாக்டர் அருண் சீத்தாராமன் மறுவாழ்வு தொடர்பாக சிறப்புரை நிகழ்த்தினார்.
ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைடு தலைவர் நவீன் பாலாஜி, தலைவர் செயலாளர் ரூபவேல், திட்டத் தலைவர் அருண் சீத்தாராமன், சிவராஜன், அருண்குமார், பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
