தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரையோரம் துள்ளிய டால்பின்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கடற்கரையோரம் துள்ளிய டால்பின்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கடற்கரையோரம் துள்ளிய டால்பின்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


UPDATED : அக் 07, 2026 09:30 PM

ADDED : அக் 07, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:30 PM ADDED : அக் 07, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரை ஓரங்களில் நேற்று டால்பின்கள் கூட்டமாக நீந்தியபடி சென்றதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முதல் தலைமை செயலகம் வரையில் கடல் ஓரங்களில், நேற்று காலை 11:00 மணிக்கு டால்பின்கள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. பருவ நிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் பகுதியில் இருந்து கரையை நோக்கி வந்த டால்பின்கள், கடல் நீரில் துள்ளிக் குதித்தும், ஒன்றுடன் ஒன்று கூட்டமாக நீந்தியபடியும் சென்றன.

இதனை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், டால்பின்களை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், பலர் தங்களது மொபைல்களில் டால்பின்களின் நீச்சல் காட்சிகளை படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

நீண்ட நேரம் கடல் பகுதியில் டால்பின்கள் கூட்டமாக தென்பட்டதால், கடற்கரைக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us