தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கால்நடை டாக்டருக்கு மிரட்டல் :நான்கு பேர் மீது வழக்கு பதிவு

கால்நடை டாக்டருக்கு மிரட்டல் :நான்கு பேர் மீது வழக்கு பதிவு

கால்நடை டாக்டருக்கு மிரட்டல் :நான்கு பேர் மீது வழக்கு பதிவு


UPDATED : அக் 07, 2026 09:30 PM

ADDED : அக் 07, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:30 PM ADDED : அக் 07, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கால்நடை டாக்டருக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் முகமது தவ்பீக், 27; கால்நடை மருத்துவர். இவர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரும்பார்த்தபுரம் வில்லியனுார் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 5ம் தேதி இரவு 11:00 மணியளவில், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடராமன், வினித்குமார், விஜய், சதீஷ் ஆகியோர் தங்களது நாயை பாம்பு கடித்துவிட்டதாக சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். முகமது தவ்பீக் நாயின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்து, பாம்பு கடிக்கவில்லை. உண்ணி காய்ச்சல் தான் என்றும் காலையில் சிகிச்சைக்கு நாயை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் முகமது தவ்பீக்கை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். இது குறித்து முகமது தவ்பீக் புகாரின் பேரில், வெங்கடராமன் உட்பட நான்கு பேர் மீது, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us