UPDATED : நவ 14, 2026 06:30 PM
ADDED : நவ 14, 2026 06:28 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கீழ்புத்துப்பட்டு சாமிநாதா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பென்சில் மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கினார். மரம் வளர்ப்போம், இயற்கையை காப்போம், மண்வளம் காப்போம், குடிநீரை சேமிப்போம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பல்வேறு விதமான மரக் கன்றுகளை, ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் நட்டனர்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ –மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடு பள்ளி முதல்வர் சுஜாதா மற்றும் துணை முதல்வர் மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
